அரசாங்க நிதி பற்றியக் குழுவின் தலைவர் பதவியில் இருந்து ஐக்கிய மக்கள் சக்தியில் நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க விலகியுள்ளார்.
அவரது பதவி விலகல் கடிதத்தை பெற்றுக்கொண்டதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்துக்கு அறிவித்துள்ளார்.
ஆளும் கட்சியினால் பரிந்துரைக்கப்பட்ட மயந்த திஸாநாயக்க, அரசாங்க நிதி பற்றியக் குழுவின் தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.
அதே நேரத்தில் எதிர்க்கட்சி கலாநிதி ஹர்ஷ டி சில்வாவின் பெயரை அந்தப் பதவிக்கு ஏற்கனவே முன்மொழிந்திருந்தது.
இதனையடுத்து, எழுந்த சர்ச்சைகள் மற்றும் விமர்சனங்களையடுத்து, குறித்த பதவியிலிருந்து விலகுவதாக மயந்த திஸாநாயக்க அறிவித்தார்.