தான் கைது செய்யப்பட்டாலோ அல்லது கொலை செய்யப்பட்டாலோ, பாகிஸ்தான் மக்கள் பின்வாங்காமல் தொடர்ந்து போராட வேண்டும் என இம்ரான் கான் அழைப்பு விடுத்துள்ளார்.
பிரதமராக பதவி வகித்தபோது பெற்ற பரிசு பொருட்களை, கோடிக்கணக்கான ரூபாய்க்கு சட்டவிரோதமாக விற்ற குற்றச்சாட்டில் இம்ரான் கானை கைது செய்து, சனிக்கிழமைக்குள் ஆஜர்படுத்துமாறு இஸ்லாமாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டது.
லாகூரில் உள்ள இம்ரான் கான் இல்லத்தில் திரண்ட ஆதரவாளர்கள் கைது செய்யவந்த பொலிஸார் மீது கற்களை வீசி தாக்குதல் மேற்கொண்டனர்.
பொலிஸார் பதிலுக்கு நீர்த்தாகை பிரயோகம் மேற்கொண்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தான் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என வீட்டிலிருந்தபடியே வீடியோ வெளியிட்ட இம்ரான் கான், மக்கள் உரிமைகளுக்காகத் தெருவில் இறங்கி போராடுமாறு அறைகூவல் விடுத்துள்ளார்.