மடகஸ்கரில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரரான ‘குடு சலிந்து’ எனப்படும் சலிந்து மல்ஷிகா நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
தனது உயிர் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரி தாய் ஊடாக இந்த மனுவை அவர் இன்று தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த மனு மீதான நிலைப்பாட்டை எதிர்வரும் 20ஆம் திகதி அறிவிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் சட்டமா அதிபருக்கு இன்று உத்தரவிட்டுள்ளது.