ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி பொது வாக்கெடுப்பை நடத்துவதற்காக ஒரு வாக்குச்சீட்டு கூட இதுவரை அச்சிடப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்குச்சீட்டு அச்சிடல் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அரச அச்சகத் திணைக்கள சேவை சங்கத்தின் பொதுச்செயலாளர் அசங்க சதருவ இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் இடம்பெறுமா, இல்லையா என்ற சந்தேகம் காணப்படுகிறது.
இலங்கை அரசியல் வரலாற்றில் இதுபோல் எந்த தேர்தலுக்கும் இவ்வாறான நிலை ஏற்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உள்ளூராட்சிமன்றத் தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் பல வழிகளில் தடைகளை ஏற்படுத்தியுள்ளது.
அரச அச்சகத் திணைக்கள தலைவரும் அரசாங்கத்தின் நோக்கத்துக்கு அமைய செயற்படுகிறார் எனவும் அசங்க சதருவ குற்றம் சுமத்தியுள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தபால்மூல வாக்கெடுப்பை எதிர்வரும் 28, 29, 30 மற்றும் 31 ஆகிய திகதிகளில் நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
தபால் மூல வாக்கெடுப்புக்கு மாத்திரம் ஆறு இலட்சத்துக்கும் அதிகமான வாக்குச்சீட்டுக்கள் அச்சிடப்பட வேண்டும், ஆனால் தற்போது 70 சதவீதமான வாக்குச்சீட்டுக்கள் தான் அச்சிடப்பட்டுள்ளது.
ஆகவே தபால்மூல வாக்கெடுப்புக்கான வாக்குச்சீட்டுக்கள் முழுமையாக அச்சிடப்படவில்லை என அவர் கூறியுள்ளார்.
அத்துடன், வாக்குச்சீட்டுக்களை அச்சிடுவதற்கு தேவையான நிதியை உரிய அதிகாரத்தை பயன்படுத்தி பெற்றுக்கொடுக்கும் நோக்கம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடையாது எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.