ஜனநாயகத்தை பாதுகாக்க அனைத்து கட்சிகளும் இணைந்து பரந்தப்பட்ட கூட்டணியை அமைக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்துள்ளார்.
சுதந்திர மக்கள் கூட்டணி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தேர்தலை ஒத்திவைத்து, மக்களை அடக்கி ஆளலாம் என நினைத்த ஆட்சியாளர்கள் படுதோல்வி அடைந்ததே இந்நாட்டு வரலாறு எனவும் அவர் கூறியுள்ளார்.
அவ்வாறான சந்தர்ப்பங்களில் எதிரணிகளுக்கே மக்கள் மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆதரவை வழங்கியுள்ளனர் எனவும் என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசு தேர்தலை நடத்தாது என்றே எண்ண தோன்றுகிறது.
எனவே, எதிரணிகள் தம்மிடையிலான விமர்சனங்களை விடுத்து, ஜனநாயகத்தை பாதுகாக்க பரந்தப்பட்ட கூட்டணியாக ஒன்றுபட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.