இந்தியாவில் 2023ஆம் ஆண்டில் 4 அமைப்புகள் பயங்கரவாத அமைப்புகளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக, மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த ராய் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சுசில்குமார் மோடி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
உபா சட்டத்தின்கீழ் தி ரெஸிஸ்டென்ட் பிராண்ட், பிப்பில்ஸ் ஆன்டி பாசிஸ்ட் பிராண்ட், ஜம்மு-காஷ்மீர் கஜ்னவி படை, காலிஸ்தான் புலிகள் படை பயங்கரவாத அமைப்புகளாக அறிவிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதில் தி ரெசிஸ்டென்ட்ஸ் பிரான்ட் அமைப்பானது, லஸ்கர் இ தொய்பாவின் கிளை அமைப்பு என்றும், Peoples Anti-Fascist Front ஜெய்ஸ் இ முகம்மதுவின் கிளை அமைப்பு என்றும், 2 அமைப்புகளும் 2019 முதல் செயல்பட்டு வருகின்றன என்றும் குறிப்பிட்டுள்ளார்.