சீனா 2023 ஆம் ஆண்டில் தனது ஆண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி இலக்கை 5 சதவீதமாக நிர்ணயித்துள்ளது.
சீனா நிர்ணயித்துள்ள வளர்ச்சி இலக்கு அண்மைய பல ஆண்டுகளில் மிகக் குறைவானதாகக் உள்ளதெனக் கூறப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டிற்கான சீனாவின் வரவுசெலவுத்திட்டத்தில் வருடாந்த பாதுகாப்பு செலவீனம் 7.2 சதவீதம் அதிகரித்து 1.5537 டிரில்லியன் யுவானாக உயருமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி இலக்கு மற்றும் சீனாவின் பிற வளர்ச்சி இலக்குகள் பற்றியும் அதில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சீனப் பிரதமர் லீ கெகியாங் 14ஆவது தேசிய மக்கள் காங்கிரஸின் முதல் அமர்வின் போது அரசாங்கப் பணி அறிக்கையை சமர்ப்பித்தார்.
லி கெகியாங், பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு முன்னுரிமை அளிப்பது மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்யும் அதேவேளையில் முன்னேற்றத்தைத் தொடர வேண்டியது அவசியம் என்று கூறினார்.
2022இல் சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி வீதம் 3 சதவீதமாக இருந்தது. இந்த ஆண்டு, பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு முன்னுரிமை அளிப்பது மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதிசெய்து முன்னேற்றத்தைத் தொடர்வது அவசியம்.
கொள்கைகள் சீரானதாகவும், இலக்காகவும் வைக்கப்பட வேண்டும், மேலும் உயர்தர வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பை உருவாக்க அவை மிகவும் ஒருங்கிணைந்த முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று சீனப் பிரதமர் வலியுத்தினார்.
சீனா நுகர்வு மீட்பு மற்றும் விரிவாக்கத்திற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். இந்த ஆண்டு முக்கிய முன்னுரிமைகளில் ஒன்றாக பொருளாதார மற்றும் நிதி அபாயங்களைத் தடுக்கவும் மற்றும் குறைக்கவும் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது.
பசுமை வளர்ச்சிக்கான மாற்றம் தொடர வேண்டும் என்றும் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் உயர் பொருளாதார குறிகாட்டிகளை கொண்டதாக சீனா தனது வரவு செலவுத்திட்டத்தினை அமைத்துள்ளது.
சீனாவின் பற்றாக்குறை 2023 இல் 3சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இது 2022ஐ விட 0.2 சதவீதம் அதிகமாகும். சீன அரசாங்கம் 2023இல் 12 மில்லியன் புதிய நகர்ப்புற வேலைகளை உருவாக்குவதை இலக்காகக் கொண்டுள்ளது.