ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச நிர்வாகத்தின் கீழாக வசிக்கும், 1947, 1965 மற்றும் 1971 ஆம் ஆண்டுகளில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து இடம்பெயர்ந்து ஜம்மு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் குடியேறிய அகதிகளின் பிரச்சினைகளைக் செவிமடுப்பதற்காக சிறப்பு நடமாடும் முகாம்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
ஆளுநர் லெப்டினன்ட் மனோஜ் சின்ஹா இந்த முகாமை ஆரம்பித்து வைத்துள்ள நிலையில், விஸ்தாபிட் சேவா சமிதி ஆதரவு அளித்துள்ளது.
விஸ்தாபித் சேவா சமிதி பொதுச் செயலாளர் அருண் சௌத்ரி கூறுகையில், கீதா மந்திர் ஸ்மிருதி பவன் பக்ஷி நகர், ஜம்மு மேல்நிலைப் பள்ளி துங்கி ரஜோரி, டாக் பங்களா பூஞ்ச், ஷிவ் ஓம் அரண்மனை ஆகியவற்றில் ஏற்பாடுகள் நடைபெற்றிருந்ததாக கூறினார்.
‘இடம்பெயர்ந்தவர்களுக்கான சிறப்பு நிர்வாக முகாம்’ என்ற தலைப்பில் விழிப்புணர்வு முகாம்கள் முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்த முகாம்களில் திறன் மேம்பாடு, சமூக நலம், தொழில் மற்றும் வணிகம், வேலைவாய்ப்பு, இளைஞர் சேவைகள் மற்றும் விளையாட்டு, கல்வி, போக்குவரத்து, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ், சுகாதாரம், மற்றும் வங்கிகள் போன்ற பல்வேறு அரசு துறைகள் அடங்கும்.
இந்நிலையில், குறித்த செயற்றிட்டத்தினை முன்னெடுத்த நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்துள்ள அகதிகள், முதன்முறையாக தங்களது பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகள் மீது அரசு கவனம் செலுத்தியுள்ளதாகவும், தங்களின் அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்படுமென்ற நம்பிக்கையை வெளியிட்டுள்ளனர்.