நிதி அமைச்சின் செயலாளர் நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக தெரிவித்து ரஞ்சித் மத்துமபண்டார மற்றும் விஜித ஹேரத் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் இரண்டு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
தேர்தலை நடத்துவதற்கு ஒதுக்கப்பட்ட பணத்தைத் தேக்கிவைக்காமல் விடுக்க வேண்டும் என கடந்த மார்ச் 3ஆம் திகதி பிறப்பித்த உத்தரவை அவர் பின்பற்றவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆகவே நிதி அமைச்சின் செயலாளர் நீதிமன்றத்தை அவமதித்ததாக முடிவு செய்து அவருக்கு தண்டனை வழங்குமாறு இரு மனிதாரர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.