வருமான வரி உச்ச வரம்பில் திருத்தம் செய்து புதிய நிதி சட்டமூலத்த்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
7 இலட்சம் ரூபாய்க்கு வரி இல்லை என்றாலும் அதற்கு கூடுதலாக வருமானம் பெற்றால் 25 ஆயிரத்து 10 ரூபாய் வரி செலுத்த வேண்டும் என்ற நிலை இருந்தது.
இதில் திருத்தம் வெளியிட்ட நிதியமைச்சர், உச்சவரம்பை அதிகரித்து ஆண்டுக்கு 7 இலட்சத்து 27 ஆயிரத்து 700 ரூபாய் வரை வருமானம் பெறுபவர்களுக்கு வரி கிடையாது என அறிவித்துள்ளார்.