தாய்வான் ஜனாதிபதி சாய் இங்-வென் நியூயோர்க்கை வந்தடைந்துள்ளதாக, அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மத்திய அமெரிக்காவிற்கான சுற்றுப்பயணத்தின் போது, அமெரிக்கா வழியாக செல்வதற்காக தாய்வான் ஜனாதிபதி சாய் இங்-வென், நியூயோர்க்கில் தரையிறங்கியதாக கூறப்படுகின்றது.
அவர் மீண்டும் நாடு திரும்பும் போது, அமெரிக்க ஹவுஸ் சபாநாயகர் கெவின் மெக்கார்த்தியை சந்திக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இத்தகைய சந்திப்பை சீனா கண்டித்துள்ளது. மேலும் இது தொடர்ந்தால், அது கடுமையான மோதலுக்கு வழிவகுக்கும் என்றும் கூறுகிறது.
இதற்குப் பதிலளித்த அமெரிக்கா, சாய்வின் பயணத்தை சீனா மிகைப்படுத்தக் கூடாது என்று கூறியுள்ளது.
தாய்வான் ஜனாதிபதி சாய் இங்-வென், இந்த வாரம் குவாத்தமாலா மற்றும் பெலிஸ் ஆகிய நாடுகளுக்குச் செல்லவுள்ளார்.