திருகோணமலை, குச்சவெளி – பொன்மாலைக் குடா பகுதியில் பௌத்த மதகுருக்களால் மக்களின் காணிக்குள் அத்துமீறி அடாத்தாக புத்தர் சிலை வைக்க முற்பட்ட போது அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியுள்ளது.
குறித்த சம்பவம் கடந்த முதலாம் திகதி இடம் பெற்றுள்ளதுடன் ஒரு வாரகாலமாக இந்த நிலமை தொடர்ந்தும் இடம்பெற்று வருகிறது.
குறித்த காணிக்குள் நுழைந்த பௌத்த மதகுரு தனது மெய்ப்பாதுகாவலுடன் சென்றிருந்த வேளையில் குறித்த மெய்பாதுகாவலர் துப்பாக்கி முனையில் மக்களை அச்சுறுத்தியுள்ளார்.
புல்மோட்டை அரிசி மலை விகாரையினை சேர்ந்த பௌத்த மதகுருவே இவ்வாறான வாய்த்தகராறில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.