இஸ்ரேலில் உள்ள பாலஸ்தீனிய சமூகங்களில் அமைதியின்மையை சமாளிக்க தீவிர வலதுசாரி தேசிய பாதுகாப்பு அமைச்சர் இதாமர் பென்-க்விர் கோரும் சர்ச்சைக்குரிய ‘தேசிய காவலர்’ திட்டத்திற்கு இஸ்ரேலிய அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை), இந்த படையை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
ஆனால் இஸ்ரேலின் தற்போதைய பாதுகாப்பு அமைப்புகளை உள்ளடக்கிய ஒரு குழு, காவலர் அதிகாரிகளை தீர்மானிக்கும் என்றும் அது காவல்துறைக்கு அடிபணியுமா அல்லது பென்-க்விரிடமிருந்து நேரடியாக உத்தரவுகளை பெறுமா என்பது தெரியவில்லை. குழு தனது பரிந்துரைகளை வழங்க 90 நாட்கள் அவகாசம் உள்ளது.
பென்-க்விரின் அலுவலகத்திலிருந்து வெளியான ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘பென்-க்விரின் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் காவலர், அவசர சூழ்நிலைகள், தேசியவாத குற்றம், பயங்கரவாதம் மற்றும் இறையாண்மையை வலுப்படுத்துதல் ஆகியவற்றைக் கையாள்வார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையானது, தீவிர வலதுசாரி யூத சக்தி கட்சியின் தலைவரான பென்-க்விர், பல மாத எதிர்ப்பு மற்றும் திங்களன்று முடங்கிய பொது வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்து அரசாங்கத்தின் சர்ச்சைக்குரிய நீதித்துறை சீர்திருத்தங்களை முடக்க ஒப்புக்கொள்ளும் நிபந்தனையாகும்.