குறைக்கப்பட்ட பேருந்து கட்டணத்தை காட்சிப்படுத்தாமல் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகளை சோதனை செய்யும் வேலைத்திட்டம் மேல்மாகாணத்தில் இன்று முதல் ஆரம்பமாகியுள்ளது.
பேருந்து கட்டணப் பதிவேட்டை பயணிகள் முன்னிலையில் காட்சிப்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மேல்மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் 29ஆம் திகதி எரிபொருள் விலை குறைக்கப்பட்ட நிலையில், கடந்த 31ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் பேருந்து கட்டணங்கள் திருத்தப்பட்டன.
பின்னர் பிரதேச செயலகத்தினால் திருத்தப்பட்ட ஆவணம் பேருந்து உரிமையாளர்களிடம் வழங்கப்பட்டது என அறிவிக்கப்பட்டுள்ளது.