மத்திய வங்கி (திருத்த) சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பெற்றுக்கொண்டுள்ளார்.
இன்று நாடாளுமன்ற அமர்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய சபாநாயகர், சட்டமூலத்தில் உள்ள எந்த விதிகளும் அரசியலமைப்பிற்கு முரணானவை அல்ல என நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாக குறிப்பிட்டார்.
அதன்படி, தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள திருத்தங்களுக்கு உட்பட்டு, நாடாளுமன்றத்தில் தனிப் பெரும்பான்மையுடன் சட்டமூலத்தை நிறைவேற்ற முடியும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.