உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பது குறித்த தமிழ் அரசியல் கட்சிகளிடம் இருந்து இணக்கப்பாடு கிடைத்துள்ளதாக நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதன் பின்னர் குறித்த ஆணைக்குழுவின் கீழ் நியமிக்கப்படும் அதிகாரிகள் பாதிக்கப்பட்ட தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் இனிவரும் காலங்களில் தாம் எந்தவொரு உள்ளகப் பொறிமுறையையும் நம்பி ஏமாற்றமடைய போவதில்லை என வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவித்துள்ளனர்.
ஆகவே காலத்தை வீணடிக்காமல் சர்வதேச விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும், அங்கும் நீதி கிடைக்காவிட்டால் போராடிச் சாவோம் என்றும் அறிவித்துள்ளனர்.
இதேநேரம் இதுவரை காலமும் காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தின் ஊடாக கிடைக்கப்பெறாத தீர்வு, இப்புதிய ஆணைக்குழுவின் ஊடாக கிடைத்துவிடும் என்று தாம் நம்பவில்லை என தெற்கில் உள்ள பதிக்கப்பட்ட தரப்பினர் தெரிவித்துள்ளனர்.