உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் வசந்த கால கூட்டத்தில் இலங்கையை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க கலந்துகொள்ளவுள்ளார்.
இம்மாதம் 10 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை வொஷிங்டன் டிசியில் இந்த கூட்டங்கள் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டங்களில் கலந்துகொள்ள ஆவலுடன் காத்திருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.
கடன் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கும், பொருளாதார மீட்சியை நோக்கி நாடு அடைந்துள்ள முன்னேற்றத்தை மேலும் மேம்படுத்துவதற்கும் சர்வதேச பங்காளிகளுடன் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு இலங்கைக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும் என்றார்.