உலகிலேயே மிகவும் வேகமாக பொருளாதார வளர்ச்சி பெறும் நாடு இந்தியா என சர்வதேச நாணய நிதயமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது.
கடந்த 2022ம் ஆண்டு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6 புள்ளி 8 சதவீதமாக இருந்தது.
இது இந்தியாவை வலுவான இடத்தில் வைத்து இருப்பதாகவும், இந்தியா மேலும் பல்வேறு வசதிகளுடன் வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் எனவும் ஐ.எம்.எப். கேட்டுக்கொண்டுள்ளது.
இருப்பினும் நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 6.1 சதவீதமாக முன்பு கணிக்கப்பட்டிருந்த நிலையில் 5 புள்ளி 9 ஆக இருக்கும் எனவும் ஐஎம்எப் குறைத்து மதிப்பிட்டுள்ளது.
அமெரிக்காவின் வொஷிங்டன் நகரில் நடைபெற்ற ஐ.எம்.எப். வசந்தகால கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றுள்ளார்.
முன்னதாக அவர் வர்த்தக நிறுவனங்களின் தலைவர்களுடன் நடைபெற்ற வட்டமேஜை மாநாட்டிலும் பங்கேற்றிருந்தார் என்பதுக் குறிப்பிடத்தக்கது.