உள்ளூராட்சி சபை எல்லை நிர்ணயத்திற்கான தேசிய குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் சமர்ப்பிக்க எதிர்வரும் 27ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக உள்ளூராட்சி மாகாண அமைச்சு தெரிவித்துள்ளது.
அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் சிவில் அமைப்புகளின் செயற்பாட்டாளர்கள் உட்பட ஆர்வமுள்ள எந்தவொரு தரப்பினரும் முன்மொழிவுகளை சமர்ப்பிக்க முடியும் என இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கம்புர குறிப்பிட்டுள்ளார்.
தேசிய எல்லை நிர்ணய குழுவின் இறுதி அறிக்கையை தயாரிக்கும் போது இவ்வாறான ஆலோசனைகள் கவனத்தில் கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி சபை எல்லை நிர்ணயத்திற்கான தேசிய குழுவின் இடைக்கால அறிக்கை, குறித்த குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரியவினால் அண்மையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் கையளிக்கப்பட்டது.