இதுவரை முறையாக கணக்கு அறிக்கையை சமர்ப்பிக்காத அரசியல் கட்சிகள் குறித்து உடனடியாக அறிக்கையினை சமர்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்க தேர்தல் ஆணைக்குழு பணிப்புரை விடுத்துள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
2021ஆம் ஆண்டுக்கான கணக்கு அறிக்கையை தேர்தல் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிப்பதில் சில அரசியல் கட்சிகள் தொடர்ந்து காலதாமதம் செய்து வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
2021ஆம் ஆண்டு தொடர்பான கணக்குகளை 14 நாட்களுக்குள் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அனுப்புமாறு அரசியல் கட்சிகளுக்கு எழுத்துப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த காலக்கெடு கடந்த வாரத்துடன் முடிவடைந்தது.
இந்தநிலையில் கணக்குகளை முறையாக சமர்ப்பிக்காத அரசியல் கட்சிகளின் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் என்ற அங்கீகாரத்தை இரத்து செய்ய தேர்தல் ஆணைக்குழு முடிவு செய்துள்ளது.