• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
அழகி, அழகன் தெரிவு, மரதன் ஓட்டப் போட்டி, சைக்கிளோட்ட போட்டிகளுக்கான விண்ணப்பம் கோரல்!

அழகி, அழகன் தெரிவு, மரதன் ஓட்டப் போட்டி, சைக்கிளோட்ட போட்டிகளுக்கான விண்ணப்பம் கோரல்!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2023/04/18
in இலங்கை, கொழும்பு
70 1
A A
0
34
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

ஜனாதிபதி அலுவலகம் மற்றும் அமைச்சுக்கள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள “வசத் சிரிய 2023”  தமிழ்  சிங்கள     புத்தாண்டு போட்டிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

அனைத்து விண்ணப்பங்களையும் www.pmd.gov.lk இணைய பக்கத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அழகன், அழகிப் போட்டி

“வசத் சிரிய புத்தாண்டு  அழகன் / அழகி  (திறந்த சுற்று) போட்டிகளுக்காக 03 மாதங்களுக்குள் எடுக்கப்பட்ட வர்ணப் புகைப்படத்துடன் விண்ணப்பிப்பது அவசியமாகும். விண்ணப்பதாரர்கள் 20-35  வயதெல்லைக்குட்பட்டவர்களாக இருத்தல் அவசியம்.

விண்ணப்படிவங்களை  பூர்த்தி செய்து  chiefacct.pd@presidentsoffice.lk   என்ற மின்னஞ்சல் முகவரிக்கு  2023.04.20 ஆம் திகதி  3.00 மணிக்கு முன்னதாக அனுப்பிவைக்கவும்.

முதலாவது, இரண்டாவது, மூன்றாவது இடங்களை பெறுவோருக்கு பெறுமதியான பரிசுகள் வழங்கப்படும்.

போட்டி நிபந்தனைகள் தொடர்பிலான இறுதி முடிவு  ஏற்பாட்டு குழுவுடையதாகும். மேலதிக  தகவல்களுக்கு தொ.இல 0702025095 ஊடாக ஏ.ஜீ.எம்,சங்கா  (ஒருங்கிணைப்பாளர்) அவர்களை தொடர்புகொள்ளமுடியும்.

மரதன் ஓட்டம்

அதேபோல்  “வசத் சிரிய”   மரதன் ஓட்டப் போட்டிகளில் பங்கெடுக்க  விண்ணபிக்கும் விண்ணப்பதாரர்கள்  20 கிலோ மீற்றர்களுக்கும் அதிகமான  தூரம் ஓடக்கூடியவர்கள் என வைத்திய  சான்றிதழுடன் விண்ணப்பிப்பது அவசியமாகும்.

இந்த விண்ணப்படிவங்கள்  2023  ஏப்ரல்  21  ஆம்  திகதி 12.00 மணிக்கு முன்பாக  ஜனாதிபதி அலுவலகத்தின்  பாதுகாப்பு  பிரிவினரிடம் கையளிக்கப்பட வேண்டும். Priyanthalalwkas@gmail.com மின்னஞ்சல் முகவரி அல்லது WhatsApp எண் 0710573828 ஊடாகவும் அவற்றை அனுப்பலாம்.

மரதன் போட்டிகளின் (ஆண்கள்)  முதலாமிடம் பெறுபவருக்கு 75,000 ரூபாவும் இரண்டாம் இடம் பெறுவபவருக்கு 50,000 ரூபாவும்    மூன்றாமிடம்   பெறுபவருக்கு  30,000ரூபாவும் வழங்கப்படும். நான்கு தொடக்கம்  பத்து வரையிலான  இடங்களை  பெறுவோருக்கு  7500 ரூபா வீதம்    வழங்கப்படும்.

மகளிருக்கான மாரதன்  ஓட்டப் போட்டியில் முதலிடம் பெறுபவருக்கு 50,000 ரூபாவும், 2ஆம் இடம்  பெறுபவருக்கு 30,000 ரூபாவும், மூன்றாம் இடம் பெறுபவர்களுக்கு 20,000 ரூபாவும், நான்காம் முதல் பத்தாம் இடங்களை பெறுபவர்களுக்கு  தலா  7,500 ரூபாவும் வழங்கப்படும்.

சைக்கிளோட்டம்

அதேபோல்   ஸ்டேண்டட் சைக்கிளோட்டப்  போட்டிகள் (ஆண் /பெண்)  நாடு தழுவிய ரீதியில்  நடத்தப்படவுள்ளது. இப் போட்டிகளை  இலங்கை விமானப் படை மற்றும் இலங்கை சைக்கிளோட்ட  கழகம்   ஆகியன  இணைந்து  ஏற்பாடு  செய்யவுள்ளன.

காலி  முகத்திடலில் இருந்து, நீர்க்கொழும்பு  வீதியூடாக,  ஜா–எல, கட்டுநாயக்க, மினுவங்கொடை,  வெயங்கொடை, நிட்டம்புவ, கண்டி வீதி,  கடவத்தை, பேலியகொடை,  காலி முகத்திடல்  வரையில்     ஆண்களுக்கான  ஸ்டேண்டட்  சைக்கிளோட்ட  போட்டிகள்  இடம்பெறவுள்ளது.

பெண்களுக்கான  சைக்கிளோட்ட  போட்டி   காலி முகத்திடலில்   ஆரம்பமாகி    காலி வீதியூடாக, பாமன்கடை, பிலியந்தலை, கெஸ்பேவ, கொட்டாவ,  மஹரகம, நுகேகொட, தும்முள்ளைச்  சந்தி,  பித்தலைச்  சந்தி,   லேக்  ஹவுஸ் வழியாக  காலி  முகத்திடல் வரையில்    இடம் பெறவுள்ளது.

1973 வருடத்திற்கு பின்னரும்  2004  ஆம்  ஆண்டிற்கு  முன்னரும்  பிறந்த     இலங்கை   சைக்கிளோட்ட   (ஆண்/  பெண்)  வீர வீராங்கணைகள்   இப்  போட்டியில்  பங்குபற்றலாம்.

ஸ்டேண்டட் சைக்கிளின்   முன்பக்க  மற்றும்  பின்  பக்க   பரப்பு  48 மற்றும்  18   ஆகவும்,  கைப்பிடி   ரெஸ்ட்  பார் / ஹெக்  பார்  கொண்டதாக  காணப்படல்  வேண்டும்.

குறித்த  விண்ணப்படிவங்களை   பூர்த்தி   செய்து   போட்டியிடுவதற்கு  தகுந்த  உடல்    ஆரோக்கியத்தை உறுதிசெய்யும் வைத்தியரின்  உறுதிப்படுத்தலுடன்    ஏற்பாட்டு  குழுவிற்கு    wasathsiriya2023race@gmail.com எனும் மின்னஞ்சல் ஊடாகவோ அல்லது 0788429688 எனும் Whatsapp உடாகவோ   அனுப்பி வைக்க   வேண்டும்.

2023   ஏப்ரல்  21  ஆம் திகதிக்கு  பின்னர்  கிடைக்கபெறும்   விண்ணப்பங்கள்  கருத்தில் கொள்ளப்படமாட்டாது   என்பதுடன்,   ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு Whatsapp ஊடாக  அறிவிக்கப்படும்.  விண்ணப்பித்தல் மற்றும் பதிவுகளுக்கான  கட்டணம்  அறவிடப்படமாட்டாது.

ஸ்டேண்டட்  சைக்கிளோட்ட   போட்டிகள் (ஆண்கள்)  முதலாமிடம்   100,000 ரூபாயும், இரண்டாம் இடத்திற்கு  75,000 ரூபாயும், மூன்றாமிடத்திற்கு  50,000 ரூபாயும், நான்காம் இடத்திற்கு  30,000 ரூபாயும்  ஐந்தாம் இடத்திற்கு 20,000 ரூபாயும்  6 – 10 வரையான இடங்களுக்கு   9,000  ரூபாய்   வீதமும் 11- 15 ஆம்  இடங்களுக்கு    5,000 வீதமும்  வழங்கப்படவுள்ளது.

மகளிருக்கான போட்டியில் முதலாமிடம் பெறுபவருக்கு 50,000 ரூபாயும், இரண்டாம் இடத்திற்கு  40,000 ரூபாவும், மூன்றாமிடத்திற்கு  30,000 ரூபாவும், நான்காம் இடத்திற்கு  20,000 ரூபாவும் ஐந்தாம் இடத்திற்கு 15,000 ரூபாவும்  6 – 10 வரையான இடங்களுக்கு   9,000  ரூபாய்   வீதமும் வழங்கப்படவுள்ளது.

கயிறு இழுத்தல்

கயிறு இழுத்தல்  போட்டிகளுக்கான  விண்ணப்பங்கள்   போட்டி நடத்தப்படுவதற்கு  இரு  தினங்களுக்கு  முன்பாக  கிடைக்கபெறல்  வேண்டும். அது தொடர்பில் 0717880695 எனும் இலக்கத்துடன் தொடர்புகொள்ள முடியும்.

ஓரு குழுவில்   8   போட்டியாளர்கள்  இணைந்துகொள்ள  முடியும்  என்பதோடு, மேலதிக  வீரர்கள் இருவருவருடன்  மொத்தமாக  10  பேர்  பங்குபற்ற  முடியும்.

ஜனாதிபதி  செயலகத்தினால்   அனைத்து   அரச  நிறுவனங்களையும்  இணைத்துகொண்டு  நடத்தப்படவுள்ள  “வசத் சிரிய”  தமிழ்  சிங்கள  புத்தாண்டு நிகழ்வுகள்    22  ஆம் திகதி    காலை  7.00  மணி முதல்   மாலை  5.00  மணி வரையில் கொழும்பு  சங்கரில்லா கீரீன்  திடலில்   நடைபெறவுள்ளதோடு,  அரச துறையினர், திறந்த பிரிவுகள்,   விருந்தினர் பிரிவு  என்ற  03  பிரிவுகளின்  கீழ்  போட்டிகள்  இடம்பெறவுள்ளன.

இசை நிகழ்ச்சி இரவு 7.00 மணிக்கு அதே இடத்தில் ஆரம்பமாகும்.

Related

Tags: அழகன் தெரிவுஅழகிசைக்கிளோட்ட போட்டிமரதன் ஓட்டப் போட்டிவசத் சிரிய
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

குரங்குகள் விவகாரம் குறித்து அரச மட்ட பேச்சு இல்லை – பந்துல

Next Post

இலங்கையர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு எவ்வாறு செல்கின்றனர்? – முக்கிய தகவல் வெளியானது!

Related Posts

சுற்றுலாத் துறையின் விரைவான வளர்ச்சிக்கு பல்வேறு முடிவுகள்
இலங்கை

சுற்றுலாத் துறையின் விரைவான வளர்ச்சிக்கு பல்வேறு முடிவுகள்

2026-01-30
அடிப்படை வசதிகளற்று இயங்கும் தண்ணீரூற்று இலங்கைத் திருச்சபை தமிழ்கலவன் பாடசாலை
இலங்கை

அடிப்படை வசதிகளற்று இயங்கும் தண்ணீரூற்று இலங்கைத் திருச்சபை தமிழ்கலவன் பாடசாலை

2026-01-30
சுமார் 60 சதவீதமானோர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமை
இலங்கை

சுமார் 60 சதவீதமானோர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமை

2026-01-30
5 இலட்சம் ரூபா நிவாரணப் பணிகளிலிருந்து விலகிய கிராம அலுவலர்கள்!
இலங்கை

டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நஷ்டஈடு வழங்கும் பணிகள் இறுதிக்கட்டத்தில்!

2026-01-30
யாழ். வந்த தென்னிந்திய பிரபல பாடகர்கள்!
இலங்கை

யாழ். வந்த தென்னிந்திய பிரபல பாடகர்கள்!

2026-01-30
சுழிபுரத்தில் பிரஜா சக்தி தெரிவில் பவானந்தராஜா எம்.பியின் தலையீடு –
யாழ்ப்பாணம்

சுழிபுரத்தில் பிரஜா சக்தி தெரிவில் பவானந்தராஜா எம்.பியின் தலையீடு –

2026-01-30
Next Post
இலங்கையர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு எவ்வாறு செல்கின்றனர்? – முக்கிய தகவல் வெளியானது!

இலங்கையர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு எவ்வாறு செல்கின்றனர்? – முக்கிய தகவல் வெளியானது!

கொள்கை வட்டி வீதத்தை மாற்றமின்றி பேணுவதற்கு தீர்மானம்!

மத்திய வங்கியில் 50 இலட்சம் ரூபாய் மாயம் - சந்தேக நபர்களைக் கைதுசெய்யுமாறு பணிப்புரை!

பண்னை நாகாபூசணிக்கு எதிராக முறைப்பாடு வழங்கியவர் விரைவில் வெளியேறுவார் – விக்னேஸ்வரன்!

பண்னை நாகாபூசணிக்கு எதிராக முறைப்பாடு வழங்கியவர் விரைவில் வெளியேறுவார் – விக்னேஸ்வரன்!

  • Trending
  • Comments
  • Latest
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
சுற்றுலாத் துறையின் விரைவான வளர்ச்சிக்கு பல்வேறு முடிவுகள்

சுற்றுலாத் துறையின் விரைவான வளர்ச்சிக்கு பல்வேறு முடிவுகள்

0
பிரதீப் ரங்கநாதனின் ‘LIK ‘ ரிலீஸ் எப்போது

பிரதீப் ரங்கநாதனின் ‘LIK ‘ ரிலீஸ் எப்போது

0
அடிப்படை வசதிகளற்று இயங்கும் தண்ணீரூற்று இலங்கைத் திருச்சபை தமிழ்கலவன் பாடசாலை

அடிப்படை வசதிகளற்று இயங்கும் தண்ணீரூற்று இலங்கைத் திருச்சபை தமிழ்கலவன் பாடசாலை

0
அணியில் எனக்கு உரிய மரியாதையும், ஆதரவும் கிடைக்கவில்லை –  மனம் திறந்தார் யுவ்ராஜ் சிங்

அணியில் எனக்கு உரிய மரியாதையும், ஆதரவும் கிடைக்கவில்லை – மனம் திறந்தார் யுவ்ராஜ் சிங்

0
Grok AI மூலம் 30 இலட்சம் படங்கள் திருட்டு

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.