பிரதமர் பதவியை பெற்றுக் கொள்வதற்காக தாம் எவ்வித கலந்துரையாடலையும் மேற்கொள்ளவில்லை என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம் பொய்யான செய்திகளை பரப்பி வருவதாகவும் மக்களால் நிராகரிக்கப்பட்ட தற்போதைய அரசாங்கத்துடன் இணையமாட்டோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
எனவே இவ்வாறான பொய்கள் மற்றும் போலியான செய்திகளை கண்டு மக்கள் ஏமாற வேண்டாம் என எதிர்க்கட்சித் தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் சலுகைகளை விற்கும் அரசியல் சூதாட்டத்தில்ஐக்கிய மக்கள் சக்தி ஈடுபடாது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.