கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள பனாமா நாட்டு கப்பலுக்குள் சட்டவிரோதமாக பிரவேசிக்க முற்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நால்வரையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அவர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை காலி பிரதான நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது, ஒவ்வொருவரையும் தலா ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
கடந்த மார்ச் 24ஆம் திகதி பனாமா மாநிலத்துக்குச் சொந்தமான சரக்குக் கப்பலுக்குள் சட்டவிரோதமாக வெளிநாடு செல்லும் நோக்கில் நான்கு யாழ் இளைஞர்கள் இரகசியமாக பிரவேசித்துள்ளனர்.
கப்பல் மார்ச் 26 ல் அமெரிக்காவிற்குச் சென்று கொண்டிருந்தபோது சூயஸ் கால்வாய் அருகே ஊழியர்கள், இவர்களை அடையாளம் கண்டதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டனர்.
பின்னர், கப்பலின் அறிவிப்பின் பேரில், கடந்த 10ஆம் திகதி, குடிவரவு அதிகாரிகள் இழுவைப்படகில் கப்பலுக்குச் சென்று, மேலதிக விசாரணைகளுக்காக இந்த இளைஞர்களை கைது செய்தனர்.