ஏப்ரல் 25 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கான பிரேரணையை கூட்டாக முன்வைப்பதாக வெளியான செய்திகளில் உண்மை இல்லை என மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த விடயத்தில் தன்னை மேற்கோள் காட்டி வெளியான உண்மையற்ற செய்தியை முற்றாக நிராகரிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் முற்போக்குக் கூட்டணி எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டணியின் அங்கம் வகிக்கும் கட்சியாகவே தொடர்ந்தும் உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய அல்லது வேறு எந்த அரசாங்கத்திலும் அங்கம் வகிக்கும் எந்தவொரு முடிவையும் கூடி தாம் விவாதிக்கவில்லை என்றும் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.