சீனாவில் மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
சீனாவின் பெய்ஜிங்கில் உள்ள மருத்துவமனை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்போது மேலும் 70 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
வெளிநாட்டு ஊடக அறிக்கைகளின்படி, சீனாவில் உள்ள மருத்துவமனைகளில் தீ விபத்துகள் பற்றிய செய்திகள் மிகவும் அரிதானவை.
இந்த தீ விபத்து குறித்து சீன அதிகாரிகள் விரிவான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.