வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா இன்று (19) பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு வருகை தரவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா சார்பில் வழக்கறிஞர் ஒருவர் ஆஜராகியுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா இன்று (19) காலை 9 மணிக்கு பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டார்.
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் அவர் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக இந்த அழைப்பு விடுக்கப்பட்டது.
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் பாரிய சதி இருப்பதாக முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா 2021ஆம் ஆண்டு சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டிருந்தார்.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை 2021 பெப்ரவரியில் அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது.
அதன் பிரதியை அப்போதைய சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவிடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இவ்வாறானதொரு பிஅவர் 2021ஆம் ஆண்டு சட்டமா அதிபர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்.
தனது பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர், ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் பாரிய சதி இருப்பதாகவும், அதில் ஈடுபட்டவர்கள் அனைவரையும் ஆதாரங்கள் மூலம் அம்பலப்படுத்த வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இது தொடர்பான அறிக்கை தொடர்பில் முன்னாள் சட்டமா அதிபரிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என கொழும்பு பேராயர் மேதகு மல்கம் கர்தினால் ரஞ்சித் பல சந்தர்ப்பங்களில் குறிப்பிட்டிருந்தார்.
இவ்வாறானதொரு பின்னணியிலேயே முன்னாள் சட்டமா அதிபர், வாக்குமூலத்தைப் பெறுவதற்காக பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.