சூடானில் சிக்கியிருந்த 28 நாடுகளைச் சேர்ந்த 388 பேரை மீட்டுள்ளதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது.
கடந்த 11 நாட்களாக இராணுவம் மற்றும் துணை இராணுவத்திற்கு இடையே நடைபெறும் மோதலால், பொதுமக்கள் சுமார் 400 பேர் உயிரிழந்துள்ளனர்.
அனைத்து நாடுகளும் தங்களது மக்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் தங்களது தூதரக அதிகாரிகளை பாதுகாப்பாக வெளியேற்றியது.
அதேபோல், நேற்று இரவு 388 பேரை இரண்டு இராணுவ விமானங்கள் மூலம் பத்திரமாக மீட்டதாக, இந்தியாவில் உள்ள பிரான்ஸ் தூதரகம் தெரிவித்தது.
இதேபோல் சவுதி அரேபியாவும் நட்பு நாடுகளை சேர்ந்த 66 பேரை மீட்டுள்ளது.
ஜேர்மனி, இத்தாலி, கனடா, ஸ்பெயின் உட்பட பல நாடுகள் தங்களது அதிகாரிகள் மற்றும் குடிமக்களை மீட்டு வருகின்றன.