இந்தியாவுடனான ஏற்றுமதி கட்டணம் திருத்தப்பட்ட பிறகு, சுக்கா நீர்மின் திட்டம் இந்த ஆண்டு 590 மில்லியன் கூடுதல் வருவாயை உருவாக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
ஒரு அலகு 45 செட்ரத்தினால் அதிகரிப்புச் செய்யப்பட்டமையானது, ஒரு கூட்டு செய்திக்குறிப்பு மூலம் அறிவிக்கப்பட்ட போதும் கட்டண திருத்தம் ஜனவரி 2021 முதல் நிலுவையில் உள்ளது.
சுக்கா நீர்மின் நிலையம் இந்த ஆண்டு 1,300 மில்லியன் அலகு மின்சாரத்தை ஏற்றுமதி செய்ய எதிர்பார்க்கிறது. புதிய கட்டணத்தினால் 4 பில்லியன் ரூபாய் வருமானம் எதிர்பார்க்கப்படுகின்றது.
கடந்த ஆண்டு, சுக்கா நீர்மின் திட்டம் 1,600 மில்லியன் அலகு மின்சாரத்தை ஏற்றுமதி செய்தது. இருப்பினும், உள்நாட்டு தேவை அதிகரித்து வருவதால், இந்த ஆண்டு ஏற்றுமதி எண்ணிக்கை குறைவாக இருக்கும் என்று கணிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
2014 ஆம் ஆண்டில், சுக்கா மின் கட்டணம் 25 செட்ரம் மூலம் திருத்தப்பட்டது, அதைத் தொடர்ந்து 2017 இல் 30 செட்ரம் என்ற மற்றொரு திருத்தம் செய்யப்பட்டது.
இதற்கிடையில், பசோச்சு நீர்மின் நிலையத்திலிருந்து சுமார் 200 மில்லியன் அலகு மின்சாரத்தை ஏற்றுமதி செய்ய மத்திய அரசாங்கம் எதிர்பார்க்கிறது. இந்த ஆலை ஆண்டுக்கு 280 மில்லியன் அலகு மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது.
இருப்பினும், இந்த ஆலையில் இருந்து வருவாய் ஈட்டுவது இந்திய எரிசக்தி பரிவர்த்தனையின் சந்தை விலையைப் பொறுத்தது.