இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 2 ஆயிரத்து 500 பேர் எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தொற்றுநோயியல் பணியகம் தெரிவித்துள்ளது.
இரத்தினபுரி, காலி மற்றும் கேகாலை மாவட்டங்களிலேயே அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
தென் மாகாணத்தின் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் இந்த வருடத்தில் மாத்திரம் 229 நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன் 19 மரணங்களும் பதிவாகியுள்ளன.
எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்படுவது நெற்பயிர்களில் வேலை செய்பவர்கள் மாத்திரமல்ல என காலி மாவட்ட சமூக விசேட வைத்திய நிபுணர் டொக்டர் அமில சந்திரசிறி தெரிவித்துள்ளார்.