ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் தமிழ் அரசியல் கட்சிகளுக்கும் இடையிலான இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை இன்று இடம்பெறவுள்ளது.
இன்று (திங்கட்கிழமை) இடம்பெறவுள்ள சந்திப்பில், அதிகாரப் பகிர்வு தொடர்பாக ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை இடம்பெறும் என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை நல்லிணக்க நடவடிக்கைகள், காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், பயங்கரவாத தடைச்ச சட்டம், காணி விவகாரம் உள்ளிட்ட விடயங்கள் ஏற்கனவே கலந்துரையாடப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளன,
மேலும் வடக்கு கிழக்கிற்கு பொருளாதார அந்தஸ்து வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை தமிழ் தலைமைகள் முன்வைத்த நிலையில் இன்றும் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.