உக்ரைனுக்கு பல இலகுரக டாங்கிகள் மற்றும் கவச வாகனங்களை அனுப்புவதாகவும், அவற்றை திறம்பட பயன்படுத்த அந்நாட்டு வீரர்களுக்கு தேவையான பயிற்சிகளை வழங்குவதாகவும் பிரான்ஸ் உறுதியளித்துள்ளது.
இதேவேளை பிரான்சுக்கு விஜயம் செய்துள்ள உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கிக்கும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனுடன் இடையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சந்திப்பு ஒன்று இடம்பெற்றிருந்தது,
இரு தலைவர்களுக்கும் இடையில் மூன்று மணிநேர பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
மேலும் ரஷ்ய தாக்குதல்களை எதிர்கொள்ளவும் மக்களைப் பாதுகாப்பதற்காகவும் உக்ரேனின் வான் பாதுகாப்பு திறன்களை ஆதரிப்பது குறித்தும் இதன்போது பிரான்ஸ் கவனம் செலுத்தியுள்ளது.
அத்துடன் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை பலவீனப்படுத்துவதற்கும் பொருளாதாரத் தடைகள் மூலம் ரஷ்யா மீது அழுத்தத்தை அதிகரிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் இதன்போது பேசப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது,