அவுஸ்ரேலிய விமானப்படைக்குச் சொந்தமான பீச் கிராப்ட் விமானம் ஒன்று இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கான அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகரினால், ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
அன்பளிப்பாக வழங்கப்பட்ட நவீன இரட்டை எஞ்சின் கொண்ட வரசடிழிசழி விமானத்தின் மூலம் இலங்கையின் கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்த முடியும் என அவுஸ்ரேலிய உள்நாட்டலுவல்கள் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச குற்றச்செயல்களை எதிர்த்துப் போராடுவதில் இரு நாடுகளுக்கும் இடையிலான நெருக்கமான ஒத்துழைப்பை இது உறுதிப்படுத்துவதுடன், கடல் மார்க்கமாக இடம்பெறும் மனிதக் கடத்தலை எதிர்க்கும் செயல்முறைக்கு பரந்த பங்களிப்பை வழங்க முடியும்.
கடல்சார் குற்றங்களுக்கு எதிராக இலங்கை வழங்கும் ஆதரவை அவுஸ்ரேலிய அரசாங்கம் மிகவும் பாராட்டுவதாகவும், ஆட்கடத்தல் செயல்பாடுகளை குறிப்பிடத்தக்க அளவில் மட்டுப்படுத்துவதற்கும், கடல் கொள்ளை மற்றும் பாதுகாப்பற்ற கடற் பிரயாணங்களிலிருந்து மக்களை பாதுகாத்தல் போன்ற செயற்பாடுகளுக்கு இரு நாடுகளுக்கிடையேயான இந்த ஒத்துழைப்பு வேலைத்திட்டம், காரணமாக அமைந்துள்ளதாகவும் குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்படி விமான செயற்பாடுகள் குறித்து அவுஸ்ரேலிய அரசாங்கம் 12 மாத காலம் இலங்கைக்கு உதவிகளை வழங்கவுள்ளதோடு, அதன் பின்னர் அதன் பொறுப்புக்கள் இலங்கை அரசாங்கத்துக்கு கையளிக்கப்படும்.