மத்திய காஷ்மீரின் புட்காம் மாவட்டத்தைச் சேர்ந்த 10 வயது சிறுவனான ஷாஹித் ஜாஹூர், அவரது இசை ஆர்வத்தால் ஆயிரக்கணக்கான இரசிகர்களை தன்வசப்படுத்தியுள்ளார்.
இது குறித்து அவர், குறிப்பிடுகையில், ‘எனது தந்தையொரு கலைஞர், நான் இரண்டாம் வகுப்பு படிக்கும்போது பலசந்தர்ப்பங்களில் அவருடன் சென்றிருக்கிறேன். அந்த நேரத்தில், நான் பாடவில்லை.
என் தந்தை என்னில் திறமையை உணர்ந்தார், காலப்போக்கில், நான் காஷ்மீரின் பாரம்பரிய இசைக்கருவியான தபலா மற்றும் தும்பக்னேர் போன்ற கருவிகளைப் வாசிப்பதற்கு ஆரம்பித்தேன்.
நான் என் தந்தையார் பங்கேற் குழுவுடன் நிகழ்வுகளில் கலந்துகொண்டபோது, அவரிடமிருந்து பல உதவிக்குறிப்புகளை எடுக்க ஆரம்பித்தேன். நான் எவ்வளவு சிறப்பாக செயற்பட்டேன் என்று பொதுமக்கள் என்னைப் பாராட்டினர், இது என்னை ஊக்கப்படுத்தியது.
பாடசாலையில் இருந்து திரும்பிய பிறகு, நான் எனது நண்பர்களுடன் படிப்பது மற்றும் விளையாடுவதுடன் இசை நிகழ்;ச்சிக்கான ஒத்திகையில் கலந்துகொள்வேன்” என்றநார்.
அவரது தந்தை ஜாகூர் அகமது கூறுகையில், “எனது மகனின் கலைத் திறமையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல விரும்புகிறேன். நான் எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும், அது திருமணமாகட்டும் அல்லது அரசாங்க நிகழ்ச்சியாகட்டும், மக்கள் ஷாஹித்தையே விரும்புகிறார்கள், அவர்கள் அவரை மிகவும் ஆதரிக்கிறார்கள்.
தற்போது, காஷ்மீரில் சினிமாவை புதுப்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதையும், பல பொலிவுட் படங்கள் இங்கு தயாரிக்கப்படுவதையும் காண்கிறோம்.
இந்தக் கலையை திரைப்படத் துறையில் கொண்டு செல்வதற்கு அரசாங்கம் அவருக்கு ஆதரவளித்து உதவ வேண்டிய தருணம் இதுவாகும்” என ஜஹூர் மேலும் கூறினார்.