பௌத்தத்தின் மூலம் மக்களுக்கும் – மக்களுக்கும் இடையிலான தொடர்பை வலுப்படுத்த இந்திய அரசாங்கம் ஆர்வமாக இருப்பதால், அமெரிக்காவிற்கான இந்திய தூதர் தரன்ஜித் சிங் சந்து தெரிவித்துள்ளார்.
2500ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவிடமிருந்து கிடைத்த மிகப் பெரிய கொடைகளில் ஒன்றாக பௌத்தம் உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
100க்கும் மேற்பட்ட நாடுகளில் கடைப்பிடிக்கப்படும் பௌத்தத்தை தான் இலங்கையில் தனது முந்தைய பணிகளில் கற்றுக்கொண்டேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
2017 ஆம் ஆண்டு ஐ.நா. சர்வதேச வெசாக் தின கொண்டாட்டத்தின் பிரதம அதிதியாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்தார். அன்றிலிருந்து அயல் நாடுகளில் பௌத்த வளர்ச்சிக்கு பல முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் கூறியுள்ளார்.
சாரநாத் மற்றும் குஷிநகர் போன்ற புனித யாத்திரை மையங்களின் புத்துயிர், குஷிநகர் சர்வதேச விமான நிலையம் திறப்பு, இந்தியா மற்றும் சர்வதேச பௌத்த கூட்டமைப்பு ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் லும்பினியில் சர்வதேச இந்திய பௌத்த கலாசாரம் மற்றும் பாரம்பரிய மையம், பல நாடுகளுக்கு இந்தியாவின் உதவி என்று அந்தப் பட்டியல் நீள்கின்றது என்றும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தென்கிழக்கு ஆசியாவில் பௌத்த மடாலயங்களை புதுப்பித்தல் மற்றும் கூட்டுத் திட்டங்களின் கட்டுமானஙகள், சர்வதேச மையங்கள் மற்றும் பௌத்த கலாசார, பாரம்பரியத்திற்கான அருங் காட்சியகங்கள் ஆகியவற்றுக்கும் இந்தியா உதவிகளை வழங்கி வருகின்றமை இந்தியாவின் முயற்சிகளின் சிலவற்றுக்கான எடுத்துக்காட்டாகும்.
அண்மையில்,இந்தியா நடத்திய உலகளாவிய பௌத்த உச்சி மாநாடு – தேசிய தலைநகரில் இரண்டு நாள் சபை என்பது வரலாற்றில் பதிவாகியுள்ள முதல் நிகழ்வாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்திய கலாசார அமைச்சகத்துடன் இணைந்து சர்வதேச பௌத்த கூட்டமைப்பு நடத்திய இந்த நிகழ்வுகளில் தாய்வான், மியான்மர், தாய்லாந்து, வியட்நாம், இலங்கை மற்றும் மொங்கோலியா உள்ளிட்ட 30 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.