கறவை மாடுகளை திருடும் நபர்களை கைது செய்து அவர்களின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட நடவடிக்கை எடுக்குமாறு விவசாய அமைச்சர் பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நாட்களில் மாடு திருட்டுகள் அதிகரித்து வருவதாக விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளால் முறைப்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில் அமைச்சர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
நாளொன்றுக்கு சுமார் 20 லீற்றர் பால் வழங்கும் கறவை மாடுகள் திருடப்படுவதாகவும், வாரத்திற்கு சுமார் 35 மாடுகள் ஒரு மாவட்டத்தில் இருந்து திருடப்படுவதாகவும் விவசாய அமைச்சுக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
இதன்படி, கறவை மாடுகளை திருடி கைது செய்யப்படும் நபர்களின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்கள் ஊடாக வெளியிட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாரிடம் அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.