மனித உரிமைகள் கண்காணிப்பகம் நடத்திய தடயவியல் விசாரணையின்படி, சிறுபான்மை இனமான உய்குர்களின் தொலைபேசிகளை சீன அதிகாரிகள் கண்காணிக்கும் 50,000 அறியப்பட்ட கோப்புகள், உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அத்துடன், பீஜிங் தீவிரவாதம் எனக்கருதும் குர்ஆனைப் பொலிஸார் விசாரணையைத் ஆரம்பிக்கும் அளவுக்கு முக்கியமான பொருளாக காணப்படுவதும் உறுதியாகியுள்ளது.
1989ஆம் ஆண்டு சீனாவில் பெரும் தணிக்கை செய்யப்பட்ட தியனன்மென் சதுக்க படுகொலை பற்றிய தகவல்களும் குறித்த கண்காணிப்புக் கோப்புகளில் உள்ளன.
‘சின்ஜியாங்கில் துருக்கிய முஸ்லிம்களுக்கு எதிரான அதன் அருவருப்பான துஷ்பிரயோகங்களை நியாயப்படுத்த சீன அரசாங்கம் மூர்க்கத்தன முறையில் இஸ்லாத்தை வன்முறை தீவிரவாதத்துடன் இணைக்கிறது’ என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் சீன இயக்குனர் மாயா வாங் கூறினார்.
‘ஐ.நா மனித உரிமைகள் பேரவையானது சின்ஜியாங்கில் சீன அரசாங்கத்தின் துஷ்பிரயோகங்களை விசாரித்து நீண்ட கால நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றும் அவர் வலியுறுத்தினார்.
மனித உரிமைகள் கண்காணிப்பகத்தால் பகுப்பாய்வு செய்யப்பட்ட முதன்மை பட்டியல் 2019 ஆம் ஆண்டில் அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஊடகமான இன்டர்செப்டில் கசிந்த சின்ஜியாங் பொலிஸ் தரவுத்தளத்திலிருந்து 52ஜிபி அளவிலான ஆவணங்களின் ஒரு பகுதியாகும், ஆனால் இது வரை அது பகிரங்கப்படுத்தப்படவில்லை.
2017 மற்றும் 2018 க்கு இடையில் 1 மில்லியனுக்கும் அதிகமான தொலைபேசிகளில் இருந்து 11.2 மில்லியன் கோப்புக்களில் பொலிஸாரால் அடையாளமிடப்பட்ட 1,000 கோப்புகளின் பகுப்பாய்வு, பிரச்சினைக்குரியதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
சின்ஜியாங்கில் தொடர்ச்சியான குண்டுவெடிப்புகள் மற்றும் கத்தி தாக்குதல்களுக்குப் பிறகு தொடங்கப்பட்ட ‘தொழில் பயிற்சி மையங்கள்’ என்று குறிப்பிடப்படும் – மறு கல்வி முகாம்களில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.