‘காலிஸ்தான்’ என்பது ஒரு தவறான பெயர், கற்பனையின் உருவம், மாறாக ஒரு பிறழ்வு. 1947இல் இந்திய பிராந்தியத்தில் ஆங்கிலேயர் ஆட்சி முடிவுக்கு வந்த பிறகுதான் ‘காலிஸ்தான்’ என்ற எண்ணம் தோற்றம் பெற்றது என்று அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
சீக்கியர்கள் குரு நானக்கின் பரம்பரையில் பத்தாவது மற்றும் கடைசி குரு கோவிந்த் சிங்கால் அவர்களுக்கு ‘காலிஸ்’ என்ற வார்த்தை வழங்கப்பட்டதாக நம்புகிறார்கள்.
‘காலிஸ்’ என்றால் தூய்மையான, ஊழல் இல்லாத நிலம் மற்றும் பெண்கள் மற்றும் அனைத்து சாதிகள்ஃ வர்க்கத்தினர் சமத்துவம் என்று பொருள்.
காலிஸ் அல்லது கல்சா என்பது தீமை இல்லாத இடம். முரண்பாடாக, காலிஸ்தான் இயக்கம் அதன் பெயரை ‘காலிஸ்’ என்ற வார்த்தையிலிருந்து பெற்றுள்ளது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றார்கள்.
சீக்கியர்கள் கிட்டத்தட்ட 30மில்லியன் மக்களைக் கொண்ட கணிசமான மதக்குழுவை உருவாக்குகிறார்கள், இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தில் பெரும்பான்மை சமூகத்தை உருவாக்குகிறார்கள். இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் வெளிநாடுகளிலும் உறுப்பினர்களைக் கொண்டுள்ளனர்.
சீக்கியர்கள் தங்கள் விடாமுயற்சி, தொழில்முனைவு, மன உறுதி மற்றும் மனிதாபிமானத்திற்காக நன்கு அறியப்பட்டவர்கள். அவர்கள் தங்கள் உள்ளார்ந்த ஆக்கிரமிப்பு மற்றும் அவ்வப்போது வெறித்தனமான தோரணைகளுக்கு பேர்போனவர்கள். ‘காலிஸ்தான்’ என்பது, வெளிப்படையாக, இந்தியாவில் இருந்து பிரித்தெடுக்கப்படும் ஒரு இறையாட்சி அரசாக பார்க்கப்பட வேண்டும் என்பது அவர்களின் நிலைப்பாடாக உள்ளது.
சீக்கியர்கள் தங்கள் புனித நூலாக மட்டுமின்றி, அவர்களின் வற்றாத குருவாகவும் மதிக்கும் குர்பானி கிரந்தத்தில் அத்தகைய கோரிக்கை எதுவும் இணைக்கப்படவில்லை. ‘காலிஸ்தான்’ என்பது பெரிய அளவில் சீக்கியர்களின் முன் கோரிக்கையாக இருந்ததில்லை.
‘காலிஸ்தான்’ என்பது, உண்மையில், ஒரு அபத்தமான கருத்தே தவிர, நடைமுறையில் சாத்தியமான முன்மொழிவு அல்ல.அவர்களின் கருத்துக்கு எந்தப் பகுதியும் செவிசாய்க்கப்படவில்லை, அரசாங்கத்தின் வடிவம் பற்றிய தெளிவு இல்லை, போராட்டத்தைத் தொடர்வதற்கான உத்தி இல்லை, தலைமை இல்லை, வளங்கள் இல்லை, இராஜதந்திரம் இல்லை. வெளிநாட்டு ஆதரவு மட்டுமே கொண்டிருப்பதோடு அதன் விளைவு எங்கும் இல்லாத குழப்பங்களே ஏற்படுத்தப்படுகிறது என்றும் அறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.