தழிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சிங்கப்பூர் பயணித்துள்ளார்.
அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் இடம்பெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கும் வகையில் சிங்கப்பூர் பயணித்துள்ளார்.
இந்த நிலையில் போக்குவரத்து தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர், உள்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் மற்றும் அந்த நாட்டின் முன்னணி தொழில் வல்லுனர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
அத்துடன் சிங்கப்பூர் பயணத்தை தொடர்ந்து நாளை மறுதினம் ஜப்பான் பயணிக்கவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.



















