22 இலட்சம் மக்களுக்கும் மாணவர்களுக்கும் எதிராக செயற்படுபவர்கள் யார் என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வியெழுப்பியுள்ளார்.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவின் பதவி நீக்கம் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார்.
27 வீதத்தால் மின்கட்டணத்தை குறைக்க முடியும் என ஆணைக்குழுவின் தலைவர் பரிந்துரைக்கும்போது, அரசாங்கமோ 3 வீதத்தால் மாத்திரம் குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளது என குற்றம் சாட்டினார்.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவருக்கு என தாம் குரல் கொடுக்கவில்லை என்றும் மாறாக, நாட்டு மக்களின் நலனுக்கே முன்னுரிமை கொடுப்பதாகவும் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியிருந்தார்.