பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவரை பதவியில் இருந்து நீக்கும் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதில் ஐக்கிய மக்கள் சக்தி கவனம் செலுத்தியுள்ளது.
இது தொடர்பில் இன்று (வியாழக்கிழமை) தீர்மானம் எடுக்கப்படும் என கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.
இதேவேளை எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் வடிவேல் சுரேஷ் தவிரஇ குமார வெல்கம மற்றும் ஏ.எச்.எம். ஃபௌசியும் அரசாங்கத்தின் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.