புதிய நாடாளுமன்றம் திறக்கப்படும் தினத்தை துக்க தினமாக அனுஷ்டிக்க திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட 19 கட்சிகள் தீர்மானித்துள்ளன.
புது டெல்லியில் புதிய நாடாளுமன்றத்தை எதிர்வரும் 28ஆம் திகதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கவுள்ளார்.
இந்த நிலையில் அரசியலமைப்பு சட்டத்தின்படி நாடாளுமன்றதை அதிகாரப்பூர்வ தலைவர் மற்றும் குடியரசு தலைவர் திறந்து வைக்கப்பட வேண்டும் ஆனால் ஜனநாயக மரபை சிதைக்கிற வகையில் பிரதமர் மோடி நடந்து கொள்வதை வன்மையாக கண்டிப்பதாக அந்த கட்சிகள் தெரிவித்துள்ளன.
எனவே எதிர்வரும் 28 ஆம் திகதி கறுப்பு கொடிகள் பறக்கவிட்டு அந்த தினத்தை துக்க தினமாக பிஅனுஷ்டிக்க தீர்மானிக்கப்பட்டு ள்ளமை குறிப்பிடத்தக்கது.