குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட ராஜாங்கனே சத்தாரத்ன தேரர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கோட்டை நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து எதிர்வரும் ஜூன் மாதம் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேவேளை மத நல்லிணக்கத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்கள் கருத்துக்களை வெளியிடுவதாக குற்றச்சாட்டப்பட்டு நேற்று கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் இன்று அவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியவில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேவேளை மத சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் வகையில் நாடாளுமன்றத்தில் சட்டமூலமொன்றை சமர்ப்பிக்கவுள்ளதாக புத்தசாசன அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.