பெற்றோல் விலை குறைக்கப்பட்ட போதிலும் கட்டணத்தை குறைப்பதில்லை என முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கம் தீர்மானித்துள்ளது.
இந்த பெற்றோல் விலை திருத்தத்தின் மூலம் தமக்கு போதிய நிவாரணம் கிடைக்கவில்லை என அகில இலங்கை முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார்.
வாராந்த எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரித்தால் முச்சக்கர வண்டி கட்டணத்தை மாற்றுவது குறித்து பரிசீலிக்கப்படும் என தொழிற்சங்கங்கள் முன்னர் அறிவித்திருந்தன.
திருத்தப்பட்ட எரிபொருள் விலை இன்று முதல் அமுலுக்கு வருகிற போதும், கட்டண மீளாய்வுக் குழுவை நியமிக்குமாறு லலித் தர்மசேகர அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.
நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகள் திருத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.