அரசாங்கத்தினால் கொண்டுவரப்படவுள்ள சட்டமூலங்களை ஆராய எதிர்க்கட்சி ஒன்றியத்தினால் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய, ஒளிபரப்பு அதிகார சபை சட்ட மூலத்திற்கு பேராசிரியர் சரித ஹேரத் (தலைவர்) ,இம்தியாஸ் பாக்கிர் மாக்கார், கயந்த கருணாதிலக்க, எரான் விக்ரமரத்ன, நாலக கொடஹேவா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டமூலம் குறித்து ஆராய்வதற்காக, பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்(தலைவர்), ரன்சித் மத்தும பண்டார, ரவூப் ஹகீம், லக்ஷ்மன் கிரியெல்ல, இம்தியாஸ் பாக்கிர் மாக்கார், திஸ்ஸ அத்தநாயக்க, உதய கம்பன்பில, எம்.ஏ.சுமந்திரன், நாலக கொடஹேவா, சரித ஹேரத், கஜேந்திர குமார் பொன்னம்பலம், சந்திம வீரக்கொடி, சன்ன ஜயசுமன, வீரசுமன வீரசிங்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், மத்திய வங்கி சட்டமூலத்தை ஆராய்ந்து மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக, எரான் விக்ரமரத்ன
(தலைவர்), ஹர்ஷ டி சில்வா, கபீர் ஹாசிம், சரித ஹேரத், சந்திம வீரக்கொடி, சன்ன ஜயசுமன, ஜீ.எல்.பீரிஸ், நாலக கொடஹேவா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.