அனைத்து அரச பாடசாலைகளிலும் மேலாண்மை குழுக் கூட்டம் எதிர்வரும் 9 ஆம் திகதி நடத்தப்பட வேண்டுமென மாநிலத் திட்ட இயக்குனர் அறிவித்துள்ளார்.
மேலாண்மை குழுக் கூட்டங்களில், இந்தக் கல்வி ஆண்டில் பாடசாலை இடைவிலகல் இல்லாமல் மாணவர்கள் தமது கல்வியினைத் தொடர்வதை உறுதிப்படுத்த வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அனைத்து வகை அரச பாடசாலைகளிலும்; குழந்தைகள் தடையின்றி சேர்க்கப்படுவதையும், பாடசாலை மேலாண்மைக் குழு கூட்டத்தில் கலந்தாலோசித்து மாணவர் சேர்க்கையை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பாடசாலையின் அருகில் உள்ள வீடுகளில் யாரேனும் மாற்றுத் திறன் குழந்தைகள் பாடசாலையில் சேராமல் இருப்பது தெரிந்தால் அக்குழந்தையின் பெற்றோரை மேலாண்மை குழுவினர் சந்தித்து பாடசாலையில் சேர்க்க ஊக்குவிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.