ரஷிய நாட்டினது இரகசியங்களை அறிந்து கொள்ளும் அமெரிக்க நாட்டின் சதித்திட்டத்தை ரஷிய பாதுகாப்புப் பிரிவு கண்டுபிடித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ரஷியாவை சேர்ந்த ஆயிரக்கணக்கான ஐபோன்களை பிரத்யேக உளவு மென்பொருள் மூலம் அமெரிக்கா உளவு பார்த்து வந்துள்ளதாக ரஷியா குற்றம் சுமத்தியுள்ளது.
சுமார் 20-க்கும் மேற்பட்ட வெளியுறவுத் துறை அதிகாரிகளின் சாதனங்கள் இந்த உளவு நடவடிக்கையில் பாதிக்கப்பட்டு இருப்பதாக மொஸ்கோவை சேர்ந்த ஆய்வகம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை பாதுகாப்புத்துறை தெரிவித்து இருக்கும் குற்றச்சாட்டுகளுக்கு ஆப்பிள் நிறுவனம் மறுப்பு தெரிவித்து இருக்கிறது.
‘அப்பிள் சாதனங்களில் பக்டோர் ஏற்படுத்தும் நோக்கில் இதுவரை எந்த அரசுடனும் நாங்கள் பணியாற்றியது இல்லை. எதிர்காலத்திலும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட மாட்டோம்,’ என்றும் அப்பிள் தெரிவித்துள்ளது.