புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் இலங்கை நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்க தகுதியற்றவர் என சிவில் சமூக குழுவான மார்ச் 12 இயக்கம் நான்கு அம்ச அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அலி சப்ரி ரஹீம் தங்கம் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளை சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டு வந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து கடந்த காலங்களில் ஊழல் மோசடியில் ஈடுபட்டிருந்தார் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் சட்டத்தின்படி நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக அதிகபட்ச தண்டனை அமுல்படுத்தப்படவில்லை என மார்ச் 12 இயக்கம் கவலை தெரிவித்துள்ளது.
அலி சப்ரி ரஹீக்கு எதிராக விசாரணை நடத்துமாறு பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ள போதிலும், இந்த விடயம் தொடர்பில் சபாநாயகர் இன்னும் அறிக்கை வெளியிடவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.
இவ்வாறான விடயங்கள் தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்காவிடின் சட்டங்களை மதிக்காத நாடாக இலங்கை அங்கீகரிக்கப்படும் என குறித்த இயக்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது
.