XPress Pearl கப்பலால் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு இழப்பீடு பெறுவதற்காக சிங்கப்பூரில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இழப்பீட்டு வழக்கை ஆராய்வதற்காக சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு உதவ ஜனாதிபதி சட்டத்தரணிகள் இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி சட்டத்தரணி ரோலண்ட் பெரேரா மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி சந்தக ஜயசுந்தர ஆகியோரே இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளனர்.
கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையினால் இவர்கள் நியமிக்கப்பட்டதாக அதன் தலைவர் சட்டத்தரணி அசேல ரெக்கவ தெரிவித்தார்.
இது தொடர்பில் சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்ட மா அதிபர் திணைக்களத்தின் சட்டத்தரணிகள் ஊடாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் ஆதரவை இந்த வழக்கிற்கு வழங்குவதாகவும் அதிகார சபையின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
XPress Pearl கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தினால் சுற்றுச்சூழல் பாதிப்புக்கு இழப்பீடு வழங்கக் கோரி சிங்கப்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.