எக்ஸ்-பிரஸ் பேர்ல் மற்றும் எம்டி நியூ டயமண்ட் கடல்சார் பேரழிவுகளால் ஏற்பட்ட சேதங்களை ஆராய்ந்து தேவையான பரிந்துரைகளை வழங்க நாடாளுமன்றத் தெரிவுக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் ரமேஷ் பத்திரன தலைமையிலான 14 பேர் கொண்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம் எக்ஸ்-பிரஸ் பேர்ல் அனர்த்தத்தினால் இலங்கைக் கடலில் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு கோருவதற்காக சிங்கப்பூரில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த வழக்கைத் தீர்ப்பதற்கு சட்டமா அதிபர் தலைமையிலான விசேட குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை நேற்று அங்கீகாரம் வழங்கியிருந்தது.
இந்த குழு சிங்கப்பூர் சென்று கப்பல் நிறுவனம் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் பேச்சில் ஈடுபட்டு அதன்பிறகு ஒரு தீர்வை எட்டுவதற்கான பேச்சுவார்த்தைகளை தொடங்கும் என்றும் அரசாங்கத்தின் மூத்த அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.
சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகள், நகர்ப்புற அபிவிருத்தி மற்றும் வீடமைப்புச் செயலாளர், கடல் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர், ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் மற்றும் அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த சட்ட ஆலோசகர் ஆகியோர் இந்தக் குழுவிற்கு தலைமை தாங்குவார்கள்.