60 வகையான மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலையை 16 சதவீதத்தால் குறைக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
மருந்துகளின் விலை எதிர்வரும் 15ஆம் திகதி முதல் குறைக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நேற்று அறிவித்திருந்தார்.
தேசிய மருந்து ஒழுங்குபடுத்தல் அதிகார சபையினால் பதிவு செய்யப்பட்ட மருந்துகளின் விலையே இவ்வாறு குறையும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
அதன்படி எதிர்வரும் 15ஆம் திகதி முதல் மருந்துகளின் விலை 16 வீதத்தால் குறைக்கப்படும் என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.